கடல் கடந்து செல்லும் செட்டிநாடு மரச்சிற்பங்கள்
செட்டிநாடு என்றதும் நாக்கில் உமிழ்நீர் சுரந்தால் நீங்கள் ஒரு உணவுப் பிரியர். அதே நேரம் செட்டிநாடு என்றதும் கண்கள் அகல விரிந்தால் நீங்கள் ஒரு கலைப்பிரியர்.
ஆம், செட்டிநாட்டிற்கு மற்றொரு சிறப்பு அது மரச்சிற்ப கலையின் தாய்மண் என்பதே. செட்டிநாட்டு மரச்சிற்பங்கள் மிகுந்த கலை நுணுக்கத்துடன் செய்யப்படுகின்றன. தேர், சிலைகள், சிற்பங்கள் என்று செட்டிநாடு சிற்பக்கலையின் பரப்புகள் அதிகம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. அங்கு தயாராகும் மரச்சிற்பங்களுக்கு நாடுகடந்த பெருமை உண்டு. அந்த கலையை தொழிலாக கொண்ட சிற்ப கலைஞர்கள் செட்டிநாடு பகுதியில் மிகுதியாக உள்ளனர்.
மரச் சிற்பங்கள் செய்வதற்கு பலா, தேக்கு, கருங்காலி, சந்தனம், மாவலிங்கை போன்ற மரங்கள் முதல் வகையாக பயன்படுத்தப்படுகின்றன. செண்பகம், தும்பை, வன்னி, மருது, கருவேம்பு, முள்பூ, துவளை, மருக்காரை, இலுப்பை, வேங்கை, வேம்பு ஆகிய மரங்கள் 2-வது வகையாக கையாளப்படுகின்றன. வெட்பாலை, ஆச்சம், வாகை, எலுமிச்சை, காசா, வெள்ளை கருங்காலி, அசோகம் ஆகியவை 3-ம் வகையிலான மரங்களாகும். முறளம், நமை, சுரபுன்னை, திப்பிலி, கடம்பு, நீர்க்கடம்பு, மஞ்சம், பச்சிலை, கொங்கு ஆகியவை 4-ம் வகையைச் சேர்ந்தவை. இப்படி மரச்சிற்பங்கள் செய்ய வகைவகையாக மரங்கள் இருந்தாலும், பெரும்பாலும் இலுப்பை, ஆச்சம், வேங்கை, தேக்கு, மகிழம், வாகை, சந்தனம், கருமருது, புள்ள மருது ஆகிய மரங்களில் தான் அதிக அளவில் மரச்சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
காரைக்குடி செஞ்சை பகுதியில் மரச்சிற்ப பணிகளில் 40 வருடங்களுக்கும் மேல் ஈடுபட்டு வரும் மருதமுத்து கூறுகிறார்:
“காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவில்களில் பயன்படுத்தப்படும் தேர், ரதம், பல்லக்கு உள்ளிட்டவற்றில் செட்டிநாட்டு மரச்சிற்பங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கலை நயத்துடன் சிற்பங்களை வடிவமைத்து கொடுக்கிறோம். மரத்தினால் செய்யப்பட்ட யாளி, பழனிக்கு பக்தர்கள் எடுத்துச் செல்லும் மரக் காவடிகள், வீட்டின் நிலைகளில் மரத்தினால் செய்யப்பட்ட கஜலட்சுமி உருவம், இந்திரன், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற கடவுள்களின் தத்ரூப வடிவங்களை சிற்பமாக கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கிறோம்.
பொதுவாக கோவில்களுக்கு புதிய தேர் செய்ய குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகும். கோவில் திருவிழாக்களில் சுவாமியை வீதி உலா எடுத்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் ரதத்தை 2 அல்லது 3 மாதங்களில் செய்துவிடுவோம். தற்போது கோவில் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மரச் சிற்பங்களைதான் அதிக அளவில் தயாரிக்கிறோம். விநாயகர், முருகன், சிவபெருமான், பெருமாள், லட்சுமி, குபேரர் உள்ளிட்ட பல்வேறு சாமிகளின் உருவங்களை அதிகமாக தயார்செய்கிறோம். கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரடியாக சென்றும் மரச்சிற்பங்கள் செய்து கொடுத்துள்ளோம். ஆர்டரின் பேரில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டில் உள்ள கோவில்களுக்கும் சிறிய அளவிலான தேர்கள் செய்யப்பட்டு, அவை கப்பலில் அனுப்பி வைக்கப்படுகின்றன” என்றார்.
காரைக்குடி பகுதிகளில் மரச்சிற்பங்களுடன் கூடிய பிரமாண்டமான கலைநயமிக்க பழங்காலத்து வீடுகளும் செட்டிநாட்டின் சிறப்பை மக்களுக்கு விளக்கி கொண்டிருக்கின்றன. வீட்டின் முன்பு மிகப்பெரிய முற்றம், மழைநீர் சேகரிப்பு தொட்டி, விஸ்தாரமாக கட்டப்பட்ட அறைகள், கலை நுணுக்கத்துடன் பர்மா தேக்குகளால் செய்யப்பட்ட மரச்சிற்பங்களுடன் கூடிய கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவை இந்த பிரமாண்ட வீடுகளை பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும். இத்தகைய வீடுகள் காரைக்குடி, கானாடுகாத்தான், ஆத்தங்குடி, பள்ளத்தூர், கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளம் உள்ளன.

Related Tags :
Next Story