மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 17-ந்தேதி முதல் பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 17-ந்தேதி முதல் பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Sep 2018 10:45 PM GMT (Updated: 2 Sep 2018 7:03 PM GMT)

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வருகிற 17-ந் தேதி முதல் பிரசார இயக்கம் தொடங்கப்பட உள்ளது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

திருவாரூர்,

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் சுதர்சன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராசு கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் வை.செல்வராஜ், கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் முருகேசு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மத்திய அரசு மக்கள் விரோத கொள்கையை கடைபிடித்து வருகிறது. குறிப்பாக ஏழை எளிய மக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகின்றனர். மாநில உரிமையில் மத்திய அரசு அத்துமீறி தலையீட்டு வருகிறது. தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், ஏ.ஐ.டி.யூ.சி.யும் இணைந்து அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் வருகிற 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தமிழ்நாடு தழுவிய பிரசார இயக்கம் நடைபெறுகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 17-ந்தேதி தொடங்கும் பிரசார பயணக்குழுவை கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்து பேசுகிறார். 5 முனைகளில் தொடங்கி தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருகிற 23-ந் தேதி திருப்பூரில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் பிரசார இயக்கம் நிறைவு பெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story