கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்களில் வணிக வளாகங்களை கட்டி வருமானத்தை பெருக்க முடிவு மந்திரி டி.சி.தம்மண்ணா தகவல்


கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்களில் வணிக வளாகங்களை கட்டி வருமானத்தை பெருக்க முடிவு மந்திரி டி.சி.தம்மண்ணா தகவல்
x
தினத்தந்தி 3 Sept 2018 2:30 AM IST (Updated: 3 Sept 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்களில் வணிக வளாகம் கட்டி பெருமானத்தை பெருக்க முடிவு செய்துள்ளதாக மந்திரி டி.சி.தம்மண்ணா கூறினார்.

பெங்களூரு, 

கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்களில் வணிக வளாகம் கட்டி பெருமானத்தை பெருக்க முடிவு செய்துள்ளதாக மந்திரி டி.சி.தம்மண்ணா கூறினார்.

மாநில அரசின் கடமை

கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை மந்திரி டி.சி. தம்மண்ணா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:-

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், ஒரு சிறப்பான மக்கள் சேவையாற்றும் அமைப்பாகும். ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவரும் இந்த நிறுவனத்தை நம்பி இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் 1.16 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். ஊழியர்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும்.

வருமானத்தை பெருக்கிக்கொள்ள...

கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்களில் வணிக வளாகங்களை கட்டி அதன் மூலம் வருமானத்தை பெருக்கிக்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு டெண்டர் அழைக்கப்படும். பஸ் நிலையங்கள் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். வரும் நாட்களில் இந்த திட்டம் அமலுக்கு வரும்.

அரசு போக்குவரத்து கழக கூட்டுறவு வங்கி சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால் அதன் அதிகாரிகள் நேர்மையாக பணியாற்ற வேண்டும். இந்த சங்கம் ரூ.2.75 கோடி லாபத்தில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் தொடக்கப்பள்ளி மற்றும் கூட்டுறவு வங்கி இருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு. இப்போது அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளது.

இவ்வாறு மந்திரி டி.சி.தம்மண்ணா பேசினார்.

சம்பளத்தில் ஒரு சதவீதம்

கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினர் தங்களின் ஒரு மாத சம்பளத்தில் ஒரு சதவீதம் (அதாவது ரூ.17 லட்சத்து 97 ஆயிரத்து 507) வெள்ளம் பாதித்த குடகு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

Next Story