திருவள்ளூரில் குடோனில் குட்கா பதுக்கிய 5 பேர் கைது


திருவள்ளூரில் குடோனில் குட்கா பதுக்கிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2018 3:00 AM IST (Updated: 3 Sept 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, குடோனில் குட்கா பதுக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் திருவள்ளூர் டவுன் போலீசார் திருவள்ளூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள 3 குடோன்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு இருந்த 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து போலீசார் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக திருவள்ளூர் பஜாரில் கடை வைத்திருக்கும் சதாராம் (வயது 40), கடையில் வேலை செய்த வடமாநில வாலிபர் விக்ரம் (25) மற்றொரு கடையின் உரிமையாளர் முருகேசன் (41) உடன் இருந்து வேலை செய்து வந்த ராஜா (26), அவரது கடையின் அருகில் கடை வைத்துள்ள டில்லிபாபு (48) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story