காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள்


காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள்
x
தினத்தந்தி 3 Sept 2018 4:00 AM IST (Updated: 3 Sept 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநல பேரவை சார்பில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டது. போட்டிகளை அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநல பேரவையின் தலைவர் தினகரன் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளுக்கு வள்ளியம்மை சுப்ரமணியன் உள்பட பலர் நடுவர்களாக செயல்பட்டனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ள காந்திய திருவிழாவில் வழங்கப்பட உள்ளது. இதில் மாறுவேட போட்டி மட்டும் அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்திபூங்காவில் நடைபெற உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக பேரவை அமைப்பு செயலாளர் நமசிவாயம் வரவேற்றார். முடிவில் பேரவை தலைமை நிலைய செயலாளர் மோகனப்பிரியா நன்றி கூறினார்.

Next Story