மாவட்ட செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே சமையல் செய்த போது உடல் கருகிய பெண் சாவு + "||" + The body was burned when the body was cooked near Singerpet

சிங்காரப்பேட்டை அருகே சமையல் செய்த போது உடல் கருகிய பெண் சாவு

சிங்காரப்பேட்டை அருகே சமையல் செய்த போது உடல் கருகிய பெண் சாவு
சிங்காரப்பேட்டை அருகே சமையல் செய்த போது ஸ்டவ் அடுப்பின் மீது விழுந்த பெண் உடல் கருதி பரிதாபமாக இறந்தார்.
ஊத்தங்கரை,

ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள அத்திப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி லட்சுமி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று இவர் வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது காய்கறி எடுத்த போது அருகில் உள்ள மண்எண்ணெய் கேன் எதிர்பாராவிதமாக ஸ்டவ் அடுப்பின் மீது விழுந்தது.


இதில் ஸ்டவ் அடுப்பின் மீது விழுந்த லட்சுமி பலத்த தீக்காயம் அடைந்தார். உடல் கருகிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சிங்காரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 6 ஆண்டுகளில் பெண் இறந்ததால் இது குறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணனும் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு கணவன் கண் முன்னே நடந்த பரிதாபம்
கபிஸ்தலம் அருகே கணவன் கண் முன்னே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
3. பிரசவத்தில் இறந்து பிறந்த பெண் குழந்தையின் உடல் அரசு மருத்துவமனை வளாகத்தில் வீச்சு
பிரவத்தின்போது இறந்து பிறந்த பெண் குழந்தையின் உடல் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் வீசப்பட்டது. அதன் தாய் தப்பியோடியதாக கிடைத்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
4. பெண் சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனே கொன்று தூக்கில் தொங்க விட்டது அம்பலம்
நாகூர் அருகே பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
5. பணிவிடை செய்தபோது தவறி விழுந்து அர்ச்சகர் சாவு: ஆஞ்சநேயர் கோவிலில் கைப்பிடி அமைக்கும் பணி தொடங்கியது
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பணிவிடை செய்தபோது அர்ச்சகர் தவறி விழுந்து இறந்ததை தொடர்ந்து, அங்கு கைப்பிடி அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.