தூத்துக்குடியில் கார் இல்லா ஞாயிறு நிகழ்ச்சி கொண்டாட்டம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

தூத்துக்குடியில் கார் இல்லா ஞாயிறு நிகழ்ச்சி கொண்டாட்டம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Sept 2018 4:45 AM IST (Updated: 3 Sept 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 2–வது வாரமாக கார் இல்லா ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் 2–வது வாரமாக கார் இல்லா ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.

கார் இல்லா ஞாயிறு

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாநகராட்சி, மாவட்ட போலீஸ் துறை சார்பில் வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் கார் இல்லா ஞாயிறு என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி நேற்று காலை 2–வது வாரமாக தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே கார் இல்லா ஞாயிறு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். அவர்கள் காலை 6 மணி முதல் மணி வரை 2 மணி நேரம் கார், உள்ளிட்ட வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், ரோட்டில் சைக்கிள் ஓட்டியும், கைப்பந்து, இசைநாற்காலி, ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story