மாவட்டத்தில் குடிநீர் வழங்குவது குறித்து கள ஆய்வு நடத்த முடிவு அதிகாரி தகவல்
சேலம் மாவட்டத்தில் குடிநீர் வழங்குவது குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பெருமாள் கூறியுள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் 10 கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் எடப்பாடி, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் 32 பேரூராட்சி, 19 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 4 ஆயிரத்து 885 குடியிருப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு 163 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 12 கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய நகராட்சி, 12 பேரூராட்சி, 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 2 ஆயிரத்து 386 குடியிருப்புகளுக்கு நாளொன்றுக்கு 73 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு வீடாக சென்று நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்றதா? என்று களஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, குறைபாடுகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்யவும், தகுந்த தொழில் நுட்ப ஆலோசனை வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி குடிநீர் வழங்குவது உறுதிபடுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story