அணுசக்தி மையத்தில் பணி
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் மைசூரு கிளையில் பல்வேறு அலுவலக பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
டைபென்ட்ரி டிரெயினி (கிரேடு1,2) பணிக்கு 78 பேரும், டெக்னீசியன், உதவி அதிகாரி, டிரைவர்- ஆபரேட்டர், செக்யூரிட்டி கார்டு, பார்மசிஸ்ட், ஸ்டெனோ, அப்பர் டிவிஷன் கிளார்க் போன்ற பணிகளுக்கு 24 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 102 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
ஒவ்வொரு பணியிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான காலியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். பாலின விகிதாச்சாரத்தை ஈடு செய்வதற்காக அதிகமான பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்சி. வேதியியல் படித்தவர்கள் டைபென்ட்ரி டிரெயினி (கேட்டகரி-1) பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்கள் படித்தவர்கள் அல்லது பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், ஆட்டோமொபைல் மோட்டார் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்டேசன், ஏ.சி. மெக்கானிக், எலக்ட்ரிக்கல், கார்பென்டர், பிளம்பர், பெயிண்டர், சர்வேயர், மாசன் போன்ற ஐ.டி.ஐ. படித்தவர்கள் டைபென்ட்ரி டிரெயினி பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதி, வயது வரம்பு வேறுபடுவதால் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தின் வழியாக 12-9-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.recruit.barc.gov.in. என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
Related Tags :
Next Story