மாவட்ட செய்திகள்

தமிழக வேலைவாய்ப்புகள் + "||" + Jobs in Tamilnadu

தமிழக வேலைவாய்ப்புகள்

தமிழக வேலைவாய்ப்புகள்
தமிழகத்தில் அரசு துறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் சிலவற்றை பார்ப்போம்...
டி.என்.பி.எஸ்.சி. : தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு 13 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. புள்ளியியல், கணிதம் பாடம் அடங்கிய பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ரூ.300 கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 26-9-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

ஆவின்: ஆவின் நிறுவனத்தின் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் சீனியர் பேக்டரி அசிஸ்டன்ட் பணிக்கு 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளஸ்-2 படிப்புடன், குறிப்பிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை தேவையான சான்றுகளுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் 10-9-2018-ந் தேதிக்குள் திண்டுக்கல் ஆவின் அலுவலகத்தை சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை www.aavinmilk.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

கட்டுமான நலவாரியம் : தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், அனைத்து மாவட்ட தொழிலாளர் உதவி ஆணைய அலுவலகங்கள் மற்றும் துயில் கூடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.

மொத்தம் 48 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இடஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் படித்தவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி தேவையான சான்றுகள் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 20-9-2018-ந் தேதியாகும்.

இது பற்றிய விவரங்களை http://www.labour.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.