இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங் களுக்கு 345 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். எனப்படுகிறது. இதன் தெற்கு மண்டல மார்க்கெட்டிங் பிரிவில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு வி்ண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இதில் டெக்னிக்கல் பிரிவில் 150 இடங்களும், நான்-டெக்னிக்கல் பிரிவில் 100 இடங்களும், டெக்னீசியன் பணிக்கு - 95 இடங்களும் உள்ளன. மொத்தம் 345 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மண்டலத்திற்கு உட்பட்ட மாநில வாரியான பணியிட விவரம் : தமிழ்நாடு-புதுச்சேரி - 145, கர்நாடகா - 68, கேரளா - 46, ெதலுங்கானா - 42, ஆந்திரா - 43.
இந்த பயிற்சிப் பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 31-8-2018-ந் தேதியில் 18 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் டெக்னிக்கல் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கும், 3 ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கும், 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் நான் டெக்னிக்கல் பிரிவு பயிற்சிப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-9-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். www.iocl.com/peoplecareers/job.aspx என்ற இணையதள பக்கத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
Related Tags :
Next Story