‘கேட்’ தேர்வு அறிவிப்பு
2019-ம் ஆண்டுக்கான ‘கேட்’ (GATE-2019) தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. என்ஜினீயரிங் பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம், மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், கோரக்பூர், சென்னை, ரூர்கி போன்ற இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்ப மைய (ஐ.ஐ.டி.) கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்பு (எம்.டெக்), மற்றும் பிஎச்.டி. படிப்பதற்கு இது ஒரு தகுதித் தேர்வாக பின்பற்றப்படுகிறது.
அத்துடன் பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களும் இந்த தகுதித் தேர்வை அடிப்படையாகக் கொண்டு தங்கள் நிறுவன காலிப் பணியிடங்களை நிரப்புவது உண்டு. பல தனியார் நிறு வனங்களும், கல்வி மையங்களும் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. எனவே வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் ஒரு தேர்வாகவும் இந்த தேர்வு மதிப்பு பெறுகிறது.
இனி இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்ப்போம்...
கல்வித் தகுதி:
என்ஜினீயரிங்/ தொழில்நுட்ப படிப்புகளில் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம். 4 ஆண்டுகளைக் கொண்ட அறிவியல் பட்டப்படிப்புகள், முதுநிலை அறிவியல் படிப்பு படித்தவர்கள் எழுதலாம்.
தேர்வு முறை:
இணையதளம் வழியான கணினித் தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும்.
கட்டணம்
இந்த தேர்வை எழுத விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.750-ம் மற்றவர்கள் ரூ.1500-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-9-2018-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். gate.iitm.ac.in என்ற பக்கம் வழியாக அறிவிப்பின் முழு விவரங்களை அறிந்து கொண்டு, விண்ணப்ப பதிவை தொடங்கவும். தேவையான சான்றுகளை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 21-9-2018
தேர்வு நடைபெறும் நாட்கள் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 2,3, மற்றும் 9,10-ந் தேதிகள்
இது பற்றிய விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story