அறிவியல் - தொழில்நுட்ப உலகின் நண்பன் ‘ஹீலியம்’


அறிவியல் - தொழில்நுட்ப உலகின் நண்பன் ‘ஹீலியம்’
x
தினத்தந்தி 3 Sept 2018 5:10 PM IST (Updated: 3 Sept 2018 5:10 PM IST)
t-max-icont-min-icon

ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. அது, பலூன்களில் நிரப்ப பயன்படுத்தப்படும் வாயு என்று மட்டுமே நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்.

ஹீலியத்தின் பயன்பாடு அறிவியல் துறையில் மிக முக்கியமானது. அது பற்றி கொஞ்சம் அறிவோம்...

* பிரான்சை சேர்ந்த பியரி ஜான்சென் மற்றும் இங்கிலாந்து வானியலாளர் நார்மன் லாக்யெர் ஆகியோர் ஹீலியம் வாயுவை கண்டறிந்தனர். 1868-ல் சூரிய கிரகணத்தின்போது, சூரிய கதிர்களை பகுப்பாய்வு செய்தபோது ஹீலியம் கண்டறியப்பட்டது.

* சூரியனைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான ஹீலியோஸ் என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டது. வேதியியலாளர்கள் எட்வர்டு பிரான்லாண்டு மற்றும் லாக்யர் ஆகியோர் இந்த பெயரை சூட்டினார்கள்.

* ஹீலியம் ஒரு வேதியல் தனிமம். அதன் அணுஎண் 2. ஹீலியத்திற்கு நிறம், சுவை, மணம் எதுவும் கிடையாது. உலகில் ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக மிக அதிகமாக காணப்படும் தனிமங்களில் ஒன்று ஹீலியம். பூமியில் 24 சதவீதம் ஹீலியம் வாயு நிரம்பி உள்ளது. ஹீலியத்தை திரவமாகவும், திடப்பொருளாகவும் மாற்றி பயன்படுத்தலாம்.

* நியானுக்கு அடுத்தபடியாக மிக மெதுவாக எதிர்வினையாற்றும் மந்தத்தன்மை கொண்டது ஹீலியம். நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் போன்ற தனிமங் களுடன் சேர்ந்த நிலையிலேயே ஹீலியம் காணப்படுவது உண்டு.

* அமெரிக்கா இயற்கை எரிவாயு கிடங்கிலிருந்து அதிக அளவில் ஹீலியம் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்கிறது.

* ஹீலியம் வாயு வேகமாக மறுஉற்பத்தி ஆகக்கூடியது. எளிதாக மறுசுழற்சி செய்யவும் முடியும். எனவே பல்வேறு பயன்பாட்டிற்கு ஹீலியம் பயன் படுத்தப்படுகிறது.

* காற்றைவிட எடைகுறைந்தது ஹீலியம். ஹீலியம் ஒரு லிட்டருக்கு ஒரு கிராம் எடையை மேலே உயர்த்தவல்லது. அதனால் பலூன் விமானங்கள், பாராசூட் போன்ற பலூன்களில் இதை பயன் படுத்துகிறார்கள். இது தீப்பற்றாது மற்றும் எதிர்வினை புரியாது. எனவே ஹீலியத்தை விபத்து ஏற்படுத்தாத நம்பகத்தன்மை கொண்ட ஒரு தோழனாக வேதியியலாளர்கள் பார்க்கிறர்கள்.

* ஹைட்ரஜன், ஹீலியத்தைவிட 7 சதவீதம் கூடுதல் மிதப்புத்தன்மை கொண்டது என்றாலும், அது தீப்பிடிக்கும் ஆபத்து கொண்டது என்பதால் அதை மிதப்பதற்கு பயன்படுத்தாமல் எரிபொருளாக மட்டுமே பயன்படுத்து கிறார்கள்.

* ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் பாதிப்புகள் உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு ஹீலியம் கலந்த மருந்துக்கலவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்துறையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது உள்பட இன்னும் பல பயன்பாட்டிற்கும் ஹீலியம் பயன்படுத்துகிறார்கள்.

* கம்ப்யூட்டர்களின் வேகத்திற்கு கைகொடுப்பதிலும் ஹீலியத்தின் பங்களிப்பு உண்டு. ஹார்டுவேர் பொருட்கள் வேகமாக செயல்படவும், வெப்பமடையாமல் தடுக்கவும் ஹீலியம் பயன்படுகிறது.

* நாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் இன்டர்நெட் மற்றும் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்பு தொழில்நுட்பத்திலும் ஹீலியத்திற்கு முக்கிய பங்கு உண்டு. ஏனெனில் இன்டர்நெட் கண்ணாடி இழைகள் மற்றும் ெதாலைக்காட்சி வயர்களின் உள்ளே ஹீலியம் வாயு நிரப்பப்பட்டிருக்கும். இது அவை உரசிக்கொள்ளாமல் இருக்க பெரிதும் உதவுகிறது.

* நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களிலும் செமிகண்டக்டர் எனப்படும் குறைமின் கடத்திகள் இருக்கும். இவற்றின் தயாரிப்பில் 4 விதங்களில் ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக குளிர்ச்சியூட்ட, வாயு நிரப்புதல் மற்றும் கசிவு கண்டுபிடித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஹீலியம் பயன்படுகிறது.

* ராக்கெட்டுகளின் எரிபொருள் கலனை சுத்தம் செய்ய ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் உள்ளிட்ட மற்ற பொருட்களை இதற்காக பயன்படுத்த முடியாது. ஹீலியம் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற பொருட்களுடன் எதிர்வினை புரியாது என்பதால் தீப்பற்றுதல் உள்ளிட்ட எந்த ஆபத்துமின்றி சுத்தம் செய்யப்பயன்படுகிறது.

* “லார்ஜ் ஹாட்ரான் கொலிடர்” எனும் பெரிய ஆய்வுக்கலன்களை வெளிப்புற வெப்பத்திலிருந்து குளிர்விக்க பல டன் கணக்கில் ஹீலியம் வாயு பயன்படுத்தப் படுகிறது.

* அணுசக்தி துறையில் மின்உற்பத்தியின்போது அணுகதிர்வீச்சு விளைவால் உருவாக்கும் பெருமளவு வெப்பத்தை குளிர்விக்கவும் ஹீலியம்தான் பயன்படுகிறது.

* நீர்மூழ்கி ஆய்வாளர்கள் சுவாசத்திற்காக நிரப்பிச் செல்லும் சுவாச சிலிண்டர் டேங்குகளில் வெறும் 20 சதவீதம்தான் ஆக்சிஜன் இருக்கும், 80 சதவீத அளவு ஹீலியம்தான் நிரப்பப்படுகிறது. இதுதான் நீரின் அடியில் நிலவும் அதிக அழுத்தத்தில் அவர்கள் சீராக சுவாசிக்க துணையாக இருக்கிறது.

* சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களின் மீதுள்ள பார்கோடுகளை படிக்க பயன்படுத்தப்படும் லேசர் கருவியில் சிவப்பு ஒளி வீசுவது ஹீலியம் நியான் லேசர் ஒளிதான் என்பதை நீங்கள் அறிவீர்களா?

இன்னும் பலவிதங்களில் ஹீலியம் நமக்கு பயன்படுகிறது.

Next Story