மணவாளக்குறிச்சி அருகே தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


மணவாளக்குறிச்சி அருகே தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Sept 2018 3:45 AM IST (Updated: 3 Sept 2018 8:29 PM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சி அருகே தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமாதெருவை சேர்ந்தவர் ஜான்சி மேரி (வயது 26), இன்னும் திருமணமாகவில்லை. இவர் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் லேப்– டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.

இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இதனால், ஜான்சி மேரி தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார். பெற்றோர் இல்லாததால் அவர் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். கடந்த சில நாட்களாக யாருடன் அதிகம் பேசாமல் சோகத்துடன் இருந்தார்.

நேற்று காலையில் ஜான்சி மேரியின் அறை கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ஜான்சி மேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருந்தது தெரியவந்தது. இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story