சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி வாலிபர் பலி டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்


சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி வாலிபர் பலி டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Sept 2018 4:30 AM IST (Updated: 4 Sept 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சூளகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 26). இவரது குடும்பத்தினர் ஆனந்தம்மா (57), பாலு (33), ஆனந்தன் (32) ஆகியோர் காரில் குடியாத்தம் புறப்பட்டனர். காரை பெங்களூருவை சேர்ந்த நைமுன் (37) என்பவர் ஓட்டினார்.

அந்த கார் நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டி பக்கமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சிமெண்டு பாரம் ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி அர்ச்சுனன் பலியானார்.

காரில் இருந்த டிரைவர் நைமுன், ஆனந்தம்மா, பாலு, ஆனந்தன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story