சம்பளம் வழங்கக்கோரி பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது, 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தாதது ஆகியவற்றை கண்டித்து பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சிவஞானம், பாரதீய மஸ்தூர் சங்க தமிழ் மாநில தலைவர் சிதம்பரசாமி, துணைத்தலைவர் துரை ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில பொறுப்பாளர்கள் ஆசைத்தம்பி, உதயகுமார், கோதண்டராமன், பஞ்கமலி, சாமுவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story