ராதாபுரம், திசையன்விளை பகுதியில் சுனாமி மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று நடக்கிறது


ராதாபுரம், திசையன்விளை பகுதியில் சுனாமி மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 5 Sept 2018 3:00 AM IST (Updated: 4 Sept 2018 7:58 PM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம், திசையன்விளை பகுதியில் இன்று (புதன்கிழமை) சுனாமி மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது.

நெல்லை,

ராதாபுரம், திசையன்விளை பகுதியில் இன்று (புதன்கிழமை) சுனாமி மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சுனாமி மாதிரி ஒத்திகை

இந்தியாவில் உள்ள கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4–ந் தேதி மற்றும் 5–ந் தேதி ஆகிய நாட்களில் ‘‘ஐ.ஓ.வேவ்–18’’ என்ற பெயரில் சுனாமி மாதிரி ஒத்திகையை ஐதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு சார்பில் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்களில் சுனாமி மாதிரி ஒத்திகை இன்று (புதன்கிழமை) நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது இந்திய கிழக்கு கடற்கரை ஓரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு, அதையொட்டி இந்தோனேசியா பகுதியில் சுனாமி ஏற்பட்டு, அதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டமான நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் மற்றும் திசையன்விளை பகுதியில் சுனாமி ஏற்படுவது போல் மாதிரி ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

பீதி வேண்டாம்

ராதாபுரம் தாலுகாவில் கூட்டப்புளி, திசையன்விளை தாலுகாவில் கூட்டப்பனை ஆகிய இடங்களில் இந்த சுனாமி மாதிரி ஒத்திகை நடைபெறுகிறது. பொதுமக்கள் முன்னிலையில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் தலைமையில் இன்று காலை 8.30 மணிக்கு இந்த ஒத்திகை நடைபெற உள்ளது.

சுனாமி எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சியானது, ஒரு மாதிரி ஒத்திகை மட்டுமே ஆகும். இதுகுறித்து பொது மக்கள் எந்த வித அச்சமோ, பீதியோ அடைய தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.


Next Story