களக்காடு யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
களக்காடு யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
களக்காடு,
களக்காடு யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
யூனியன் அலுவலகம் முற்றுகைநெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடி நெரிஞ்சிவிளை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடந்த 2014–ம் ஆண்டு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது வரை திறக்கப்படாததாலும், செங்களாகுறிச்சி பஞ்சாயத்து சார்பில் வடக்கு தெரு, சர்ச் தெரு ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு, நீர்த்தேக்க தொட்டிகளும் பழுதடைந்து கிடப்பதே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் எனக்கூறி அந்த கிராம மக்கள் நேற்று காலை திடீரென களக்காடு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைஅங்கு ஆணையாளர் இல்லாததால் அவரது அறையின் முன்பு போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து களக்காடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லிவிபால்ராஜ் மற்றும் யூனியன் அதிகாரிகள் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.