ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்
கும்மிடிப்பூண்டி பஜாரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி,
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை போலீசார் பல்வேறு வகையில் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி பஜாரில் ரெட்டம்பேடு சாலை சந்திப்பில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி வைத்து அவர்களுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி கலந்து கொண்டு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
மேலும் சாலை பாதுகாப்பு குறித்து அவர் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார். அப்போது இருசக்கர வாகன பயணத்தின்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிவதாக வாகன ஓட்டிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் நேற்று போக்குவரத்துத்துறை மற்றும் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாகனம் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மது அருந்திவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ, அதிக வேகமாகவோ வாகனங்களை ஓட்டிச்செல்லக்கூடாது.
போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், செல்லதுரை, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story