இன்று மின்சாரம் நிறுத்தம்
கம்பைநல்லூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
மொரப்பூர்,
கடத்தூர் கோட்டம் இருமத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், க.ஈச்சம்பாடி, சொர்ணம்பட்டி, மாவடிப்பட்டி, ஆல்ரபட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், அக்ரஹாரம், முத்தம்பட்டி, மல்லமாபுரம், பள்ளம்பட்டி, பெரிச்சாகவுண்டம்பட்டி, காட்டனூர், வெண்ணாம்பட்டி, பட்டகப்பட்டி, பெரமாண்டப்பட்டி, கெலவள்ளி, கெங்காரப்பட்டி, கூடுதுறைப்பட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடமங்கலம், கொண்ரம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
இதே போல ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று மேற்கொள்ளப்படுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போச்சம்பள்ளி துணை மின் நிலையத்திற்குட்பட்ட போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டபள்ளி, கோட்டப்பட்டி, மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், மத்தூர், சிவம்பட்டி, கவுண்டனூர், அத்திப்பள்ளம், அந்தேரிப்பட்டி, களர்பதி, குள்ளம்பட்டி, வலசகவுண்டனூர், புளியம்பட்டி, மாடர அள்ளி, ஆம்பள்ளி, கண்னண்டஅள்ளி, அத்திக்கானூர், பெருகோபனபள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்,ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாய்க்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.இந்த தகவலை போச்சம்பள்ளி மின் பகிர்மானக் கோட்ட செயற்பொறியாளர் தி.வேல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story