மாவட்ட செய்திகள்

மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி + "||" + In student affairs Soundarajan Tamilisai You should behave well

மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

கோவை,

கோவை வந்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கோவை நகரில் 24 மணி நேர குடிநீர் வினியோகத்துக்காக மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் நிறுவனத்து டன் செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 18–ந் தேதி சி.ஐ.டி.யு., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகங்கள் முன்பும் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கிறது.

கோவை மக்களின் வாழ்வாதார பிரச்சினையை மையமாக வைத்து நடைபெறும் இந்த போராட்டத் தை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தம் செய்யக்கோரி தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

தூத்துக்குடியில் ஆராய்ச்சி மாணவி சோபியா, தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார். இந்த விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கில் மாணவிக்கு தீவிரவாதிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்துள்ளார். இது தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழகல்ல. அவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின்பேரில் மாணவி மீது போலீசார் நட வடிக்கை எடுத்துள்ளனர். இதுபோல் தமிழிசை மீது மாணவியின் தந்தை கொடுத்த புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் தலையை கொண்டு வந்தால் 1 கோடி ரூபாய் என சிலர் அறிவிப்பு வெளியிட்டனர். அப்போதும் அவர் அமைதியாகத்தான் இருந்தார்.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது
சாத்தான்குளம் அருகே கல்லூரி மாடியில் இருந்து குதித்ததில் படுகாயத்துடன் மாணவி உயிர்தப்பினார். அவரை காதலிக்குமாறு தொந்தரவு செய்து தற்கொலைக்கு தூண்டிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
2. பள்ளிக்குள் புகுந்து மாணவியை கடத்த முயன்ற 3 பேர் அடித்துக் கொலை
பீகார் மாநிலத்தின் பெகுசரை மாவட்டத்துக்கு உட்பட்ட நாராயணிபூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார்.
3. சத்தியத்தை மீறி தந்தை மது குடித்ததால் பள்ளி மாணவி தற்கொலை
தர்மபுரி அருகே சத்தியத்தை மீறி தந்தை மது குடித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
4. மொடக்குறிச்சி அருகே பள்ளிக்கூட மாணவ– மாணவிகளை ஏற்றிச்சென்ற அரசு பஸ் சேற்றில் சிக்கியது
மொடக்குறிச்சி அருகே பள்ளிக்கூட மாணவ–மாணவிகளை ஏற்றிச்சென்ற அரசு பஸ் சேற்றில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. 7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது
விழுப்புரத்தில் 7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.