தாமரை குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தாமரை குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 4 Sep 2018 10:30 PM GMT (Updated: 4 Sep 2018 9:02 PM GMT)

கீழ்வேளூர் அருகே எரவாஞ்சேரி தாமரை குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மாரியம்மன் கோவில் பின்புறம் குருமணாங்குடி செல்லும் சாலையில் தாமரைகுளம் உள்ளது. இந்த குளத்தை இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு உபயோகத்திற்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

மேலும், ஏரிக்கரை மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்தில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த குளத்தில் ஆகாய தாமரை செடிகள் மண்டி புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் தாமரை குளத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே தாமரை குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story