சிறுமியை துப்பாக்கியால் சுட்ட வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல்


சிறுமியை துப்பாக்கியால் சுட்ட வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல்
x
தினத்தந்தி 5 Sept 2018 4:56 AM IST (Updated: 5 Sept 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

காதல் தகராறில் சிறுமியை துப்பாக்கியால் சுட்ட வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தானே,

தானே மாவட்டம் கல்வாவை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 2016-ம் ஆண்டு ராஜஸ்தான் சென்றிருந்தார். அப்போது அங்கு கமல்காந்த் சைனி (21) என்பவருடன் சிறுமிக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் காதலில் விழுந்தனர். பின்னர் மும்பை வந்த கமல்காந்த் சைனி அரசு தேர்வு எழுத வேண்டும் என்று கூறிக்கொண்டு சிறுமி வீட்டில் தங்கியிருந்தார்.

சம்பவத்தன்று தன்னுடன் சொந்த ஊருக்கு வருமாறு சிறுமியை அழைத்தார். சிறுமி அவருடன் செல்ல மறுத்ததால் துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.

லைசென்ஸ் பெறாமல் வைத்திருந்த துப்பாக்கி மூலம் அவர் சிறுமியை சுட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கமல்காந்த் சைனியை கைது செய்த போலீசார் தானே மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நிறைவில், கமல்காந்த் சைனிக்கு 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். 

Next Story