வெர்சோவா - பாந்திரா இடையே கடல்வழி மேம்பால பணியை தொடங்க திட்டம்


வெர்சோவா - பாந்திரா இடையே கடல்வழி மேம்பால பணியை தொடங்க திட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2018 5:44 AM IST (Updated: 5 Sept 2018 5:44 AM IST)
t-max-icont-min-icon

வெர்சோவா- பாந்திரா கடல்வழி மேம்பால பணியை அடுத்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மும்பை,

மும்பையில் பாந்திரா- ஒர்லி கடல்வழி பாலத்தின் விரிவாக்க திட்டமான வெர்சோவா- பாந்திரா இடையே ரூ.7 ஆயிரம் கோடி செலவில் கடல்வழி மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.

17.7 கி.மீ. தூரத்துக்கு இடையே அமையும் இந்த கடல் வழி மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் போது பாந்திரா - வெர்சோவா இடையிலான பயண நேரம் வெறும் 15 நிமிடமாக குறைந்து விடும். தற்போது, இவ்விரு இடங்களுக்கு இடையே பயணிப்பதற்கு சுமார் 2 மணி நேரம் வரை ஆகிறது.

இந்த கடல்வழி மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நேற்று மராட்டிய மாநில சாலை மேம்பாட்டு கழகம் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ரக்சர் நிறுவனத்துக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

இந்த நிலையில், அடுத்த மாதம் (அக்டோபர்) வெர்சோவா - பாந்திரா கடல்வழி மேம்பால பணிகளை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் ராதேஷ்யாம் மோபல்வார் தெரிவித்து உள்ளார்.

இந்த திட்டப்பணிகளை 5 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story