மாவட்ட செய்திகள்

ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம், 10–ந்தேதி கடைசி நாள் + "||" + Going to Jerusalem Christians can apply for financial assistance

ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம், 10–ந்தேதி கடைசி நாள்

ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம், 10–ந்தேதி கடைசி நாள்
ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்கள் நிதிஉதவி பெற விண்ணப்பிக்க 10–ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக மாநில அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஜெருசலேம் பயணம் மேற்கொள்ள உள்ள கிறிஸ்தவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

 இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து கட்டணமின்றி பெறலாம்.

 இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

 மேலும் அதே இணையதள முகவரியில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து, அஞ்சல் உறையில் “ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்“ என்று குறிப்பிட்டு வருகிற 10–ந்தேதிக்குள் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், மேலாண்மை இயக்குனர், சென்னை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.