மாவட்ட செய்திகள்

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு + "||" + Tomorrow mother planning camps tomorrow Collector Sandeepanjuri Announcement

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்களின் பட்டியலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

 தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்களின் பட்டியலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

அம்மா திட்ட முகாம்

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி தாலுகாவில் கோரம்பள்ளம் பகுதி–2 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் முறப்பநாடு கோவில்பத்து கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் சேர்ந்தமங்கலம் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் கருங்கடல் கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் தோணுகால் கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவில் சங்கரலிங்கபுரம் கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவில் ராஜாப்பட்டி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் ஜெகவீரபாண்டியாபுரம் கிராமத்திலும், கயத்தாறு தாலுகாவில் காமநாயக்கன்பட்டி கிராமத்திலும், ஏரல் தாலுகாவில் கீழ்பிடாகை கஸ்பா கிராமத்திலும் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் முகாம் நடக்க உள்ளது.

கோரிக்கை விண்ணப்பங்கள்

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு– இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்களை கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.



தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார்
கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார்.
2. வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு முகாம் கலெக்டர் கணேஷ் ஆய்வு
வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்காளர் பட்டியல்் திருத்தப்பணி சிறப்பு முகாமை கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார்.
3. திருப்பூர், அவினாசி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
திருப்பூர், அவினாசி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
4. காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும், கலெக்டர் வேண்டுகோள்
காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
5. ‘பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்’ பொதுமக்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று பேராவூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.