வ.உ.சி. பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை
புதுவை பாரதி பூங்காவில் உள்ள கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
புதிய நீதிக்கட்சி சார்பில் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் வ.உ.சிதரம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், தேவநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story