புதுவையில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவையில் பிரதேச ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காந்தி வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி,
புதுவையில் பிரதேச ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி காந்தி வீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் மது என்கிற லிங்கேசன் வேலு தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கருப்பு நிற பலூன்களை பறக்க விட்டும், எலும்பு கூட போல வேஷம் அணிந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story