அரசு பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் கேக் வெட்டியும், பரிசு வழங்கியும் மகிழ்ந்தனர் + "||" + The celebration of the Teachers' Day Celebration in Government Schools enjoyed the cake cut and gift
அரசு பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் கேக் வெட்டியும், பரிசு வழங்கியும் மகிழ்ந்தனர்
அன்னவாசல், பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கேக் வெட்டியும் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கியும் மாணவர்கள் மகிழ்ந்தனர்.
அன்னவாசல்,
இந்தியா முழுவதும் நேற்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் விழா ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அன்னவாசல் ஒன்றியம், உருவம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி மாணவ-மாணவிகள், ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர், மேலும் ஆசிரியர்கள் குறித்து வாழ்த்து பாடல் பாடியும், வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசு பொருட்களை ஆசிரியர்களுக்கு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
இதேபோல அன்னவாசல் அருகே உள்ள குளவாய்ப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களும், மாணவர் களும் சேர்ந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கியும் ஆசிரியர் தினத்தை கொண்டாடினர்.
இதேபோல அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணா மலைப்பட்டி, காலாடிப்பட்டி, செங்கப்பட்டி மற்றும் மரிங்கிப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி, மற்றும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.