போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து ரூ.25 லட்சம் மோசடி - உகாண்டா நாட்டை சேர்ந்த 2 பேர் கைது
பெங்களூருவில் நூதன முறையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக உகாண்டா நாட்டை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு கொத்தனூர் போலீசார் ஹெக்டே நகர் சர்க்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் அருகே சந்தேகப்படும் படியாக சுற்றிய 2 வெளிநாட்டினரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன முறையில் கருவிகளை பொருத்தி அதன்மூலம் பெறும் தகவல்களை வைத்து போலியாக ஏ.டி.எம். கார் டுகள் தயாரித்து பொதுமக்க ளின் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இந்த வழக்கில் பாபாலண்டா அமுனான் (வயது 25), ஆன்ஜிடோ அம்ரோஸ் (22) ஆகியோரை கைது செய்துள்ளோம். உகாண்டா நாட்டை சேர்ந்தவர்களான இவர்களில் பாபாலண்டா அமுனான் பெங்களூரு கொத்தனூர் அருகே உள்ள கெம்பேகவுடா நகரிலும், ஆன்ஜிடோ அம்ரோஸ் எம்.எஸ்.பாளையாவில் உள்ள ராஜீவ்காந்தி நகரிலும் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் ஏ.டி.எம். எந்திரங் களில் ஏ.டி.எம். கார்டுகளை தேய்க்கும் இடத்தில் ‘ஸ்கீம்மர்’ எனும் கருவியையும், ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பொத்தான்களின் மேல்புறம் சிறிய அளவிலான ரகசிய கேமராவையும் பொருத்து வார்கள்.
பொதுமக்கள் யாரேனும், அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் தங்களின் ஏ.டி.எம். கார்டுகளை தேய்க்கும்போது, ‘ஸ்கீம்மர்’ கருவியானது ஏ.டி.எம். கார்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் எண்களை பதிவு செய்து கொள்ளும். பொத்தான்களின் மேல்புறம் இருக்கும் கண்காணிப்பு கேமராவானது அவர்களின் 4 இலக்க ரகசிய எண்ணை பதிவு செய்து கொள்ளும். இவ்வாறாக தொடர்ந்து பொதுமக்களின் ஏ.டி.எம். கார்டு விவரங்களை அவர்கள் ெபற்றுள்ளனர். இந்த விவரங்களை வைத்து அவர்கள் சிறப்பு மெ ன்பொருளை பயன்படுத்தி போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பணமோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இந்த வகையில் பாபாலண்டா அமுனான், ஆன்ஜிடோ அம்ரோஸ் ஆகியோர் சேர்ந்து ரூ.25 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட இவர்களது நண்பர் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடிவருகிறோம். தற்போது 2 பேர் சிக்கியதன் மூலம் பெங்களூருவில் 20-க்கும் அதிகமான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன. இவர்கள் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களின் மூலம் பொதுமக்களின் தகவல்களை திருடி மோசடி செய்ததுதெரியவந்துள்ளது.
கைதானவர்களிடம் இருந்து 2 மடிக்கணினிகள், போலியாக ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்கும் 2 எந்திரங்கள், 4 ‘ஸ்கீம்மர்’ கருவிகள், சிறிய அளவிலான கேமராக்கள், இணையதள சேவைகளுக்கான மோடம்கள், 9 செல்போன்கள், 20 போலி ஏ.டி.எம். கார்டுகள், ரூ.60 ஆயிரம், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story