தூத்துக்குடி மாணவி “சோபியாவின் பாஸ்போர்ட்டை கொண்டுவர போலீசார் சம்மன்” தந்தை சாமி பேட்டி

தூத்துக்குடி மாணவி “சோபியாவின் பாஸ்போர்ட்டை கொண்டுவர போலீசார் சம்மன்” தந்தை சாமி பேட்டி
x
தினத்தந்தி 6 Sept 2018 3:29 PM IST (Updated: 6 Sept 2018 3:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை கொண்டு வருமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக, அவருடைய தந்தை சாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை கொண்டு வருமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக, அவருடைய தந்தை சாமி தெரிவித்தார்.

வழக்கு

தூத்துக்குடி வந்த விமானத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக தூத்துக்குடியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சோபியா கோஷம் எழுப்பினார். இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் இடையே விமான நிலையத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் அறித்த புகாரின்பேரில் சோபியா மீது புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் சம்மன்

இந்த நிலையில் சோபியாவின் தந்தை சாமிக்கு நேற்று புதுக்கோட்டை போலீசார் நாளை (வெள்ளிக்கிழமை) போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து சோபியாவின் தந்தை சாமி கூறும்போது, ‘புதுக்கோட்டை போலீசார் நாளை காலை 10 மணிக்கு என்னுடைய மகளின் பாஸ்போர்ட்டை கொண்டு வருமாறு சம்மன் அனுப்பி உள்ளனர். என்னை மட்டும் தான் வருமாறு கூறி உள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Next Story