நெல்லை மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் பட்டியல் கலெக்டர் ஷில்பா அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
அம்மா திட்ட முகாம்
தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ளது.
அதன்படி நெல்லை தாலுகாவில் கருவநல்லூர் கிராமத்திலும், ராதாபுரம் தாலுகாவில் இருக்கன்துறை பகுதி–2 கிராமத்திலும், அம்பை தாலுகாவில் தெற்கு கடையம் கிராமத்திலும், நாங்குநேரி தாலுகாவில் தோட்டாக்குடி கிராமத்திலும், சேரன்மாதேவி தாலுகாவில் கரிசூழ்ந்தமங்கலம், தேசமாணிக்கம் கிராமங்களிலும், பாளையங்கோட்டை தாலுகாவில் வேலன்குளம் கிராமத்திலும், மானூர் தாலுகாவில் பல்லிக்கோட்டை கிராமத்திலும், சங்கரன்கோவில் தாலுகாவில் வீரிருப்பு கிராமத்திலும்,
கோரிக்கை விண்ணப்பங்கள்
திருவேங்கடம் நாலுவாசன்கோட்டை கிராமத்திலும், தென்காசி தாலுகாவில் குணராமநல்லூர் கிராமத்திலும், செங்கோட்டை தாலுகாவில் செங்கோட்டை மேலூர் கிராமத்திலும், வீரகேரளம்புதூர் தாலுகாவில் சுரண்டை பகுதி–2 கிராமத்திலும், ஆலங்குளம் தாலுகாவில் அணைந்தபெருமாள் நாடானூர் கிராமத்திலும், சிவகிரி தாலுகாவில் தென்மலை பகுதி–2 கிராமத்திலும், கடையநல்லூர் தாலுகாவில் போகநல்லூர் கிராமத்திலும், திசையன்விளை தாலுகாவில் சடையனேரி கிராமத்திலும் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்களை கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story