மாவட்ட செய்திகள்

வேன் மோதி கொத்தனார் பலி + "||" + Van Collide worker kills

வேன் மோதி கொத்தனார் பலி

வேன் மோதி கொத்தனார் பலி
நெய்வேலி அருகே வேன் மோதி கொத்தனார் பலியானார்.

நெய்வேலி,

நெய்வேலி பி–2 மாற்றுக்குடியிருப்பை சேர்ந்தவர் முருகையன் (வயது 55). கொத்தனார். இவர் நேற்று பண்ருட்டியில் இருந்து மாற்றுக்குடியிருப்பு நோக்கி தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். தில்லைநகர் அருகே சென்ற போது, பின்னால் வந்த வேன், மொபட் மீது மோதியது. 

இதில் காயமடைந்த முருகையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி முருகையன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி புதுப்பெண் சாவு கணவர் உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் புதுப்பெண் உயிரிழந்தார். மேலும் கணவர் உள்பட 3 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
2. இலங்கை கடற்படையினர் விரட்டியதில் கடலுக்குள் விழுந்து பலியான மீனவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்
இலங்கை கடற்படையினர் விரட்டியதில் கடலுக்குள் தவறி விழுந்து பலியான மீனவரின் குடும்பத்துக்கு முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.
3. விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது: தீக்குச்சிகளை பற்ற வைத்த சிறுமி உடல் கருகி பலி
தீக்குச்சிகளை பற்ற வைத்து விளையாடிய சிறுமி உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
4. மினிலாரி–மொபட் மோதல்: கணவன், மனைவி பலி திட்டக்குடி அருகே பரிதாபம்
திட்டக்குடி அருகே மினிலாரி–மொபட் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலியானார்கள்.
5. காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலி
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.