சேலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2018 3:45 AM IST (Updated: 7 Sept 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் ஆகியவை சார்பில் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம்,

தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் ஆகியவை சார்பில் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதித்தியன் முன்னிலை வகித்தார்.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவு தொடங்கி முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பள்ளிகளில் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள நலத்திட்ட அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் மாநில துணைத்தலைவர் இளங்கோவன், அமைப்பு செயலாளர்கள் மாரியப்பன், ராஜ், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story