ராஜபாளையம் பெரியாதிகுளம் தூர்வாரும் பணி தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு


ராஜபாளையம் பெரியாதிகுளம் தூர்வாரும் பணி தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 7 Sep 2018 10:15 PM GMT (Updated: 2018-09-07T19:51:45+05:30)

ராஜபாளையம் அருகே பெரியாதிகுளம் தூர்வாரும் பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பெரியாதிகுளம் ஆகாயத்தாமரையாலும், கழிவுநீராலும் மாசடைந்து வருவதாகவும், அதனை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 இதனையடுத்து குளத்தை தூர்வார தாசில்தார் ராமசந்திரன் நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து குளம் தூர்வாரும் பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாசில்தாரின் முயற்சி பாராட்டுக்குரியது என்றும், தொகுதியில் உள்ள அனைத்து கண்மாய், குளங்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாசில்தாரிடம் கேட்டுக்கொண்டார். மேலும் மழைக்காலங்களில் கண்மாய்களில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் கழிவுநீரை வெறியேற்றி சுத்தப்படுத்துவதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என்றும் கூறினார்.

 இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.யுடன் நகர செயலாளர் ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர துணை செயலாளர் சரவணன், பச்சமடம் மாரிமுத்து உள்ளிட்டோர் இருந்தனர்.


Next Story