பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் - 7 இடங்களில் இன்று நடக்கிறது


பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் - 7 இடங்களில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 7 Sep 2018 11:30 PM GMT (Updated: 7 Sep 2018 8:12 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் 7 இடங்களில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் 7 இடங்களில் இன்று நடப்பது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்காகவும், மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான குறைகளை தீர்க்க சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது வினியோக திட்டம் தொடர்பாக பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி தாலுகாவில் சவுட்டள்ளியிலும், ஊத்தங்கரை தாலுகாவில் சென்னப்பநாயக்கனூரிலும், போச்சம்பள்ளி தாலுகாவில் சந்தூரிலும், பர்கூர் தாலுகாவில் ஜெகதேவியிலும், சூளகிரி தாலுகாவில் அளேசீபத்திலும், ஓசூர் தாலுகாவில் அச்செட்டிப்பள்ளியிலும், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அன்னியாளத்திலும் இந்த கூட்டம் நடக்கிறது. எனவே இந்த குறை தீர்க்கும் நாளில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story