அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2018 5:14 AM IST (Updated: 8 Sept 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருவாரூர் அருகே குன்னியூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர்,

திருவாரூர் ஒன்றியம் குன்னியூர் ஊராட்சியில் தட்டுபாடுயின்றி குடிநீர் வழங்க வேண்டும். எரியாத தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும். குளங்களில் படித்துறை அமைத்து தர வேண்டும். நூலகம், உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும். குப்பைகளை முழுமையாக அகற்றி குப்பை தொட்டி வைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் ஒன்றியம் குன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் வினோத் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட தலைவர் கோசிமணி, ஒன்றிய செயலாளர் சுந்தரய்யா, ஒன்றிய தலைவர் கவிநிலவன், ஒன்றிய பொருளாளர் விக்னேஷ், ஒன்றிய துணைத்தலைவர் வானதீபன், ஒன்றிய துணை செயலாளர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story