மாவட்ட செய்திகள்

வள்ளியூர் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை + "||" + Near Valliyur Panchayat Office is civilian Siege with empty gutters

வள்ளியூர் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை

வள்ளியூர் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை
வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
வள்ளியூர், 

வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

முற்றுகை 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது நம்பி நகர். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் சீராக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள், ராதாபுரம் யூனியன் அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எனவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை 

இதுகுறித்த தகவல் அறிந்ததும் பஞ்சாயத்து செயலர் சுமிலா சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தையில், உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று உறுதி அளித்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.