வருவாய் துறை சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே வழங்க வேண்டும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

வருவாய் துறை சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே வழங்க வேண்டும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Sept 2018 2:45 AM IST (Updated: 8 Sept 2018 8:05 PM IST)
t-max-icont-min-icon

வருவாய் துறையில் வழங்கப்படும் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே வழங்க வேண்டும் என்று குற்றாலத்தில் நடந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி, 

வருவாய் துறையில் வழங்கப்படும் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே வழங்க வேண்டும் என்று குற்றாலத்தில் நடந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில பொதுக்குழு கூட்டம் 

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் குற்றாலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாநில தலைவர் சந்தான கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முத்துசெல்வன், செயலாளர் குமார், பொருளாளர் அருள்மாரி, துணை தலைவர் ராஜசேகர், இணை செயலாளர் ராம்குமார், அமைப்பு செயலாளர் ஆறுமுகம், பிரசார செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் செல்வன் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார், செயலாளர்கள் முருகன், சுரேஷ், பாண்டியன், அமைப்பு செயலாளர் மகேந்திரன் ஆகியோர் பேசினர்.

தீர்மானம் 

கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிப்பது, வருவாய் துறையில் வழங்கப்படும் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே வழங்கும் பொறுப்புகளை கோருதல், பட்டா மாறுதல் இனங்களுக்கு கோப்புகளை முழுவடிவில் தயார் செய்யும் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க கோருதல், நடப்பு பசலி முதல் பட்டா மாறுதல் அனைத்து கோப்புகளை தமிழ் நிலம் மென்பொருளில் பதிவேற்றம் செய்ய கோருதல் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென்காசி வட்ட தலைவர் தர்மர், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சாந்தி மற்றும் வட்ட உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Next Story