மாவட்ட செய்திகள்

வள்ளியூர் அருகே தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு + "||" + Quality has been upgraded near Valliyur Higher Secondary School

வள்ளியூர் அருகே தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு

வள்ளியூர் அருகே தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா 
அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

வள்ளியூர்,

வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 

மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், பிரபாகரன், விஜிலா சத்யானந்த், இன்பதுரை எம்.எல்.ஏ., மாநில கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன் வரவேற்றார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் வேளாண்மை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை சார்பில் 169 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

விழாவில் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம் (வள்ளியூர்), அந்தோணி அமலராஜா (ராதாபுரம்), வள்ளியூர் நகர செயலாளர் தவசிமுத்து, ராதாபுரம் தாசில்தார் புகாரி, வள்ளியூர் யூனியன் ஆணையாளர் ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுசிலா உள்பட பலர் கலந்துகொண்டனர். தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் ஷாஜகான் கபீர் நன்றி கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயலைவிட அரசு வேகமாக செயல்பட்டது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
கஜா புயலைவிட அரசு வேகமாக செயல்பட்டது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
2. கஜா புயல்: தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் புயல் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
3. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்து 426 பணியாளர்கள் மீட்பு பணி அமைச்சர் காமராஜ் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்து 426 பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
4. புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்பாதைகளை சீரமைக்க 560 பணியாளர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்பாதைகளை சீரமைக்க 560 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
5. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கால்நடைகளுக்கு நோய் ஏற்படுவதை தடுக்க 166 மருத்துவ குழுக்கள் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கால்நடைகளுக்கு நோய் ஏற்படுவதை தடுக்க 166 மருத்துவ குழுக்கள அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.