டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய எடியூரப்பா
பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் டெல்லியில் இருந்து எடியூரப்பா திடீரென்று பெங்களூருவுக்கு திரும்பி வந்துள்ளார்.
பெங்களூரு,
செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா பெங்களூருவுக்கு வந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. ஆனால் எடியூரப்பா தனது குடும்பத்தினருடன் மடாதிபதியை சந்திக்க வந்ததாகவும், அவரை சந்தித்து விட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில், எடியூரப்பா டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பி வந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி குமாரசாமி, கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்-மந்திரியாக பதவி ஏற்பதற்காக டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருப்பதாக கூறினார்.இதுபற்றி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர் ‘‘சில காரணங்களுக்காக டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்துள்ளேன். நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்க பெங்களூருவுக்கு வந்திருப்பதாக குமாரசாமி கூறியுள்ளார். அவர் சொன்னது உண்மையாகட்டும் என்றார்.
Related Tags :
Next Story