அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு


அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2018 5:27 AM IST (Updated: 9 Sept 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர்,

கரூர் மாவட்டத்தில் மக்களை தேடி சென்று அவர்களின் கோரிக்கைகளை வருவாய்துறையினர் நிவர்த்தி செய்யும் வகையில் அம்மா திட்ட முகாம் நடந்து வருகிறது.

அந்த வகையில் வருகிற 14-ந் தேதி அன்று குளித்தலை வட்டத்தில் மருதூர் தெற்கு கிராமத்தில் ஆதிநத்தம் அரசு நடுநிலைப்பள்ளியிலும், அரவக்குறிச்சி வட்டத்தில் புன்னம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்திலும், வருகிற 28-ந் தேதி குளித்தலை வட்டத்தில் கல்லடை கிராமத்தில் கீழ வெளியூர் நூலகத்திலும், அரவக்குறிச்சி வட்டத்தில் கொடையூர் கிராமத்தில் ஐந்து ரோடு ஊராட்சி அலுவலக கட்டிடத்திலும் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

அன்றைய தினங்களில் காலை 10 மணியளவில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தலைமையில், இந்த முகாம் நடக்கிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story