விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க கூடாது : துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க கூடாது : துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 9 Sep 2018 12:21 AM GMT (Updated: 9 Sep 2018 12:21 AM GMT)

விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க கூடாது என துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பாதுகாப்பு மற்றும் சிலைகள் வைக்க பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மணமேல்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டைபட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் அறிவுறுத்தி பேசியதாவது:-

விநாயகர் சிலைகளை வைப்பதற்கு தடையில்லா சான்று பெறவேண்டும். ஒலிப்பெருக்கி சம்பந்தமாக போலீசாரிடம் அனுமதி பெறவேண் டும். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும். சிலைகள் மீது ரசாயனம் பூசக்கூடாது. கல்வி நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் அருகில் சிலைகளை வைக்கக் கூடாது. சிலை ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. சிலை ஊர்வலத்துக்கு லாரி, டிராக்டர் போன்ற வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, வட்டாட்சியர் வில்லியம் மோசஸ், இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க. நிர்வாகிகள், பொதுமக்கள், போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story