‘வைட்டமின்’ வசீகரம்


‘வைட்டமின்’ வசீகரம்
x
தினத்தந்தி 9 Sep 2018 9:12 AM GMT (Updated: 9 Sep 2018 9:12 AM GMT)

உடலின் சீரான இயக்கத்திற்கு வைட்டமின்களின் பங்களிப்பு முக்கியமானது. உடல் உள் உறுப்புகள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின்கள் உறுதுணையாக இருக்கின்றன.

டலின் சீரான இயக்கத்திற்கு வைட்டமின்களின் பங்களிப்பு முக்கியமானது. உடல் உள் உறுப்புகள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் வைட் டமின்கள் உறுதுணையாக இருக்கின்றன. சரும அழகை மேம்படு த்துவதற்கு வைட்டமின் இ அவசிய மானதாக இருக்கிறது. வைட்டமின் இ மாத்திரைகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றலாம். அதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.

* சூரிய வெப்பத்தாக்கத்தை பிரதிபலிக்கும் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை காப்பதற்கு வைட்டமின் இ உதவுகிறது. சரும சுருக்கத்திற்கும் நிவாரணம் அளிக்கிறது. இரண்டு வைட்டமின் இ மாத்திரைகளுடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சருமத்தில் தடவிக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* பிரசவத்தின்போது வயிற்றில் உருவாகும் கோடுகளை வைட்டமின் இ மாத்திரையால் போக்கலாம். ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை எடுத்து லேசாக சூடுபடுத்தி அதனுடன் வைட்டமின் இ மாத்திரையை சேர்த்து குழப்பி தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்துவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து வெதுவெ துப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் மறைய தொடங்கும்.

* சிறிதளவு எலுமிச்சை சாறுடன் ஐந்து வைட்டமின் இ மாத்திரை களை சேர்த்து குழைத்தும் தழும்புகளில் தடவி மசாஜ் செய்யலாம். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெ துப்பான நீரில் கழுவ வேண்டும்.

* வெது வெதுப்பான நீரில் 1 டேபிள்ஸ் பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் மற்றும் வைட்டமின் இ மாத்திரையை கலந்துகொள்ள வேண்டும். அந்த நீரில் கை, கால்களை 15 நிமிடம் முக்கி வைக்க வேண்டும். பின்னர் விரும்பிய மாய்ச்சரைசரை தடவிக்கொள்ளலாம். தினமும் அவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Next Story