உடலுக்கு ஏற்ற உற்சாக நீர்


உடலுக்கு ஏற்ற உற்சாக நீர்
x
தினத்தந்தி 9 Sept 2018 3:19 PM IST (Updated: 9 Sept 2018 3:19 PM IST)
t-max-icont-min-icon

லவங்கப்பட்டை, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. சமையலிலும் தவிர்க்கமுடியாத பொருளாக பயன்படு்கிறது.

வங்கப்பட்டை, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. சமையலிலும் தவிர்க்கமுடியாத பொருளாக பயன்படு்கிறது. இனிப்பு மற்றும் கார வகை உணவுகள், பலகாரங்களிலும் சேர்க்கப்படுகிறது. லவங்கப்பட்டையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

லவங்கப்பட்டையை வெதுவெப்பான நீரில் ஊற வையுங்கள். அந்த நீரை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம். மேலும் சுவாச கோளாறுகள், இதய நோய் சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் சூடான நீரில் லவங்கப்பட்டை தூளை கலந்து பருகிவரலாம். தினமும் ஒரு கப் லவங்கப்பட்டை நீர் பருகுவது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலிகளை குறைக்க உதவும்.

உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கும் லவங்கப்பட்டை நீர் நிவாரணம் அளிக்கும். அதனுடன் தேன் சேர்த்து பருகலாம். அதிக பசி உணர்வை கட்டுப்படுத்தும். அதன்மூலம் உடல் எடை இழப்புக்கு வழிவகை செய்யும்.

மூட்டு வலி மற்றும் கீல்வாத பாதிப்புக்கு ஆளாகுபவர்களும் லவங்கப்பட்டை நீரை பருகி வரலாம். அதிகப்படியான வலியைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் துணை புரியும். கீல்வாத பாதிப்புகளை கட்டுப்படுத்தும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக தக்கவைத்துக்கொள்வதற்கு லவங்கபட்டை நீரை பருகி வரலாம். எனினும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் டாக்டர்களின் ஆலோசனை பெற்று, அதன் பிறகு லவங்கப்பட்டை நீரை பருகுவது நல்லது.

மூளையின் சீரான இயக்கத்திற்கு லவங்கபட்டை நீர் உறுதுணை புரியும். மறதி நோய் உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்து.

இந்த நீரை பருகினால் புற்றுநோயில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். லவங்கப்பட்டையில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி-கார்சிஜினோஜெனிக் சேர்மம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால் தினமும் லவங்கப்பட்டை நீர் பருகி வருவது நல்லது.

Next Story