மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதி மாணவர் உள்பட 2 பேர் சாவு + "||" + Two people died including a bus with a bus on a motorcycle

மோட்டார்சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதி மாணவர் உள்பட 2 பேர் சாவு

மோட்டார்சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதி மாணவர் உள்பட 2 பேர் சாவு
திண்டுக்கல் அருகே சுற்றுலா பஸ் மோதி மோட்டார்சைக்கிளில் வந்த மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம் பாலம்ராஜக்காப்பட்டி அருகே உள்ள கோட்டூர் ஆவரம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(வயது 22). டிராக்டர் டிரைவர். இதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் மகன் ராஜசேகர்(17). இவர் பழனியில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று இரவு ரெட்டியார்சத்திரத்தில் இருந்து கோட்டூர் ஆவரம்பட்டிக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

திண்டுக்கல் அருகே கதிரையன்குளம் என்ற இடத்தில் அவர்கள் வந்தபோது திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி சென்ற சுற்றுலா பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் 2 பேருக்கும் தலையில் பலத்த அடிபட்டது. அதையொட்டி ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து நடந்தவுடன் அந்த பகுதியில் இரவு 9¼ மணியில் இருந்து 9¾ மணி வரை அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த மாணவர் ராஜசேகரை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயலால் சேதம்: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி பலி
கஜா புயலால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி பலியானார்.
2. சிவகங்கை மாவட்டத்தில் சுவர் இடிந்து அரசு ஊழியர் பலி; மரம் சாய்ந்து பெண் நசுங்கி சாவு
சிவகங்கை மாவட்டத்தில் புயல், மழைக்கு அரசு ஊழியர், ஒரு பெண் என 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
3. நம்பியூர் பகுதியில் கோமாரி நோயால் கால்நடைகள் சாவு: கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு
கோமாரி நோயால் ஏராளமான கால்நடைகள் இறந்ததை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை முதன்மை செயலாளர் கோபால் நம்பியூர் பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
4. தாராபுரம் அருகே கார் கவிழ்ந்து டிராவல்ஸ் உரிமையாளர் பலி, 3 பேர் படுகாயம்
தாராபுரம் அருகே கார் கவிழ்ந்து டிராவல்ஸ் உரிமையாளர் பலியானார். போலீஸ் ஏட்டு உள்பட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
5. வாணாபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி சுகாதார துறையினர் விசாரணை
வாணாபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பரிதாபமாக இறந்தாள்.