காஞ்சீபுரம் அருகே வாகனம் மோதி சிறுமி பலி


காஞ்சீபுரம் அருகே வாகனம் மோதி சிறுமி பலி
x
தினத்தந்தி 10 Sept 2018 3:00 AM IST (Updated: 10 Sept 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெற்றோர் கண்முன்னே மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன். இவரது மகள் ரேஷ்மா (வயது 14). இவர் தன்னுடைய தாய், தந்தையுடன் உறவினர் திருமணத்திற்காக திம்மசமுத்திரத்தில் இருந்து காவேரிப்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

காஞ்சீபுரம் தாமல் அருகே உள்ள ஓட்டல் அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் ரேஷ்மா கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரேஷ்மா மீது ஏறி இறங்கியது. இதில் ரேஷ்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோர் கண் முன்னே மகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய், தந்தை இருவருக்கும் எந்தவித காயமும் இல்லை.

இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து மோதிய வாகனத்தை தேடி வருகிறார்.

Next Story