முழுஅடைப்பு எதிரொலி: பெட்ரோல் ‘பங்க்’களில் அலைமோதிய வாகன ஓட்டிகள்


முழுஅடைப்பு எதிரொலி: பெட்ரோல் ‘பங்க்’களில் அலைமோதிய வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 10 Sept 2018 4:30 AM IST (Updated: 10 Sept 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது. அதன்படி புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரி,

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது. அதன்படி புதுச்சேரியிலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இன்று பெட்ரோல் ‘பங்க்’கள் மூடப்படும் என்பதால் புதுவையில் உள்ள பெட்ரோல் ‘பங்க்’களில் நேற்று மாலை முதல் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட்டு சென்றனர்.


Next Story