பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் விலை புதிய உச்சத்தை அடைந்து உள்ளது. இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஸ்ரீரங்கன் முன்னிலை வகித்தார். இதில் இரு சக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து ‘கண்ணீர் அஞ்சலி’ நோட்டீசு ஒட்டப்பட்டது. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல், மகளிர் அணி பொறுப்பாளர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story