பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1¼ லட்சம்-செல்போன்கள் கொள்ளை
தஞ்சை அருகே பழுதான மோட்டார்சைக்கிளை நிறுத்த வந்திருப்பதாக நடித்து, பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1¼ லட்சம், செல்போன்களை ஒருவர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்காட்டுப்பள்ளி,
அப்போது அங்கு வந்த ஒருவர் தனது மோட்டார்சைக்கிள் பழுதடைந்து விட்டதாக, 3 பேரிடமும் கூறினார். பின்னர் அந்த நபர் மோட்டார்சைக்கிளை, பெட்ரோல் விற்பனை நிலையத்தின் ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டார். இந்த நிலையில் நள்ளிரவில் அந்த நபர் பெட்ரோல் விற்பனை நிலைய அலுவலகத்துக்குள் இருந்து வெளியே வருவதை, முருகேசன் கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன், அந்த நபரை பிடிக்க முயற்சி செய்தார்.
ஆனால் அந்த நபர், முருகேசனை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். தான் கொண்டு வந்த மோட்டார்சைக்கிளையும் அந்த நபர் எடுத்து செல்லவில்லை. இதைத்தொடர்ந்து பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள், அலுவலகத்துக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம், ஒரு மடிக்கணினி, 2 செல்போன்களை காணவில்லை.
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பழுதடைந்த மோட்டார்சைக்கிளை நிறுத்த வந்திருப்பதாக நடித்து அந்த நபர் பணம், செல்போன்கள், மடிக்கணினியை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அந்த நபர் யார்? அவர் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு கொண்டு வந்தது திருடப்பட்ட மோட்டார்சைக்கிளா? என்பது பற்றி செங்கிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் செங்கிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story